தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பத்மநாபபிள்ளை மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. குணசேகரன் தலைமையிலான ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செய்துங்கநல்லூர் வள்ளுவர் காலனி விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் மேல புத்தனேரி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மகாராஜன் 24. மற்றும் முறப்பநாடு வடக்கு தெருவை சேர்ந்த துரைப்பாண்டியன் மகன் ராஜா 22. ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகளான மகாராஜன் மற்றும் ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 125 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் ரொக்கப்பணம் ரூபாய் 52,400/- ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளி ராஜா மீது ஏற்கனவே முறப்பநாடு காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 2 வழக்குகளும், திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒரு வளர்க்கும் என 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.