தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் மேற்பார்வையில் குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. ராமகிருஷ்ணன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. குணசேகரன் தலைமையிலான ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று (07.12.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரங்கன்தட்டு to வீரமாணிக்கம் ரோடு பகுதியின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தூத்துக்குடி முள்ளக்காடு சாமிநகர் பகுதியைச் சேர்ந்த இசக்கி மகன் ஆறுமுகம் (24), என்பதும் அவர் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி தனிப்படை போலீசார் குற்றவாளி ஆறுமுகத்தை கைது செய்து அவரிடமிருந்த 60 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆறுமுகம் மீது முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.