தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் மேற்பார்வையில் சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மேரி ஜெமிதா தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சுரேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று 12.01.2023 சாயர்புரம் நம்மாழ்வார்நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் புதுக்கோட்டை முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் சிவஞான மூர்த்தி (31) என்பவர் சட்டவிரோத விற்பனைக்காக மதுபாட்டில்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் குற்றவாளி சிவஞான மூர்த்தியை கைது செய்து அவரிடமிருந்த 137 மதுபாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சாயர்புரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளி சிவஞானமூர்த்தி மீது ஏற்கனவே புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.