திருவாரூர் : திருத்துறைப்பூண்டி காவல் சரக பகுதிகளில் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்த குமார் (எ) ரத்தினகுமார் 34. பாமணி என்பவரையும், வினோத் 33. என்பவரையும் திருவாரூர் பகுதியில் பாலியல் குற்றத்தில் (POCSO) ஈடுபட்ட குருமூர்த்தி 28. என்பவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் தனிப்படை அமைத்துகைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரை மற்றும் அதிரடி நடவடிக்கையின்பேரில் மேற்படி குற்றவாளிகள் மூன்றுபேரும்
இன்று குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்படிகுற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
மேலும் இதுபோன்று திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீதும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா