திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் (11.06.2020) நாங்குநேரி காவல் நிலையம் இ.த.ச பிரிவு 294(b),352,506(i)IPC மூலக்கரைப்பட்டி காவல் நிலையம் இ.த.ச பிரிவு 294(b),387,506(ii)IPC வழக்குகளில் எதிரிகளான நாங்குநேரி, மஞ்சங்குளம், தெற்கு தெருவை சேர்ந்தவர்களான சுடலைகண்ணு என்பவரது மகன் சுப்பையா, சுந்தரபாண்டி என்பவரது மகன் சாமிதுரை என்பவர்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க
நாங்குநேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு.பொ.சபாபதி அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரிகள் சுப்பையா,சாமிதுரை ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் நாங்குநேரி பார்ஸ்டல் பள்ளியில் 11.06.2020 தேதி அடைக்கப்பட்டனர்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி