திருநெல்வேலி : (29.07.2022)-ம் தேதி நாங்குநேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில், முன்விரோதம் காரணமாக சாமிதுரை (26), என்பவரை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவரின் மகன் ராஜ சேகரன் (30), வடக்கு தாழையூத்து, சி.எஸ்.ஐ சர்ச் தெருவை சேர்ந்த பிரவீன் ராஜ்(30), ஆகியோர், மேலும் கடந்த (17.07.2022)-ம் தேதி மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் தாழையூத்து, சங்கர்நகரை சேர்ந்த (இறந்து போன) ராஜா(45), என்பவரை முன்விரோதம் காரணமாக கழுத்தை நெரித்து கொலை செய்து தீ வைத்து எரித்த வழக்கில் வெள்ளாங்கோட்டை, வலசால்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்த செல்லதுரை என்பவரின் மகன் தர்மராஜா (25) என்பவர், மேலும் சுத்தமல்லி காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் கொள்ளை, அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட மேல கல்லூர், மேல தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் ராஜேந்திரன் என்ற ரசம் (19), என்பவர், மேலும் தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வடக்கு தாழையூத்து, ஐந்து லைன் தெருவை சேர்ந்த காசிராஜன் என்பவரின் மகன் செல்வம்(23), என்பவர் உட்பட ஐவரையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி நபர்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப., அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்குநேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ரஜத் R. சதுர்வேதி இ.கா.ப., அவர்கள், மானூர் காவல் ஆய்வாளர் திரு. சபாபதி, தாழையூத்து காவல் ஆய்வாளர் திரு. சந்திரசேகர், சுத்தமல்லி காவல் ஆய்வாளர் திரு.ஜீன்குமார், ஆகியோருக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.