மதுரை : மதுரை மாவட்டத்தில், கொட்டாம்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மேலத்தேத்ம்பட்டி அருகே மணல் அள்ளுவதாக திரு. கல்யாணம் முத்து கிராம நிர்வாக அலுவலர், வஞ்சிநகரம் கிராமம், மேலூர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொட்டாம்பட்டி காவல்துறையினர், விரைந்து சென்று, நான்கு நபர்களை கைது செய்தனர்.
மேற்படி கைது செய்த நபர்களிடம் இருந்து மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய நான்கு வாகனங்களை பறிமுதல் செய்து, மேற்படி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, மேல் நடவடிக்கை எடுத்தனர். மேலும் இது போன்ற சட்ட விரோதமாக மணல் அள்ளும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி