திருவண்ணாமலை : (15 /09/2022), தேதி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் தலைமையில் மூன்று காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 7 காவல் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை பகுதியில் கள்ளச்சாராயம், கஞ்சா,குட்கா போன்ற தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தல் மற்றும் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கள்ளச்சாராயம் விற்றதாக ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏழு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 252 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிர வாகன சோதனையில் முறையான ஆவணங்கள் இல்லாத 17 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.