சேலம் : சேலம் மாவட்டம், தாரமங்கலம் காவல் நிலையம் உட்பட்ட கோழி காட்டனூர் பகுதியில் லாட்டரி சீட் விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது இதன் பேரில் காவல்துறையினர் SSI திரு.கந்தசாமி, மற்றும் தலைமை காவலர் திரு.அய்யப்பன், முதல் நிலை காவலர் திரு.கலையரசன், இவர்கள் புகார் வந்த இடத்திற்கு சென்ற போது அங்கு அஜித் (24) மற்றும் வெங்கடேசன் (26), இவர்கள் இரண்டு பேரும் லாட்டரி சீட் விற்பனை செய்வது தெரிய வந்தது .இதை அடுத்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து புகார் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்