கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட், சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலர், வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் ஓசூர் To பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் உள்ள ஜூஜூவாடி RTO சோதனை சாவடி அருகே, கிருஷ்ணகிரி To ஓசூர் தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் உள்ள ஜூனியர் குப்பண்ணா ஓட்டல் எதிர்ப்புறம் உள்ள ரோட்டில் ஆகிய இரண்டு இடங்களில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த நான்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் இரண்டு வாகனங்களிலும் சுமார் 8 யூனிட் M-Sand, மற்ற இரண்டு வாகனங்களில் சுமார் 7 யூனிட் M-Sand, 6 யூனிட் ஜல்லி இருந்தது அனுமதியின்றி M-Sand , ஜல்லி கடத்திய நான்கு வாகனத்தை பறிமுதல் செய்து இரண்டு காவல் நிலையத்தில் வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .