திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம்.அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நிலைய ஆய்வாளர் திரு.ரமேஷ் குமார் அவர்கள் சார்பு ஆய்வாளர் திரு.சின்னப்பன் அவர்கள் தலைமையில் காவல் நிலைய போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது A.வெள்ளோடு சுடுகாடு பகுதியில் கஞ்சாவை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஐயர் காளை(47), சாத்தாயி(71) மற்றும் ஞானசுந்தரி(70) ஆகிய 03 நபர்களையும் கைது தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஐயர் காளை என்பவரின் வீட்டில் சோதனை செய்த போது 20 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.இதனை அடுத்து 03 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
