கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் இரண்டு இடங்களில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் பழையபேட்டை அருந்ததி மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள பெட்டிக்கடை அருகே மற்றும் பழைய பேட்டையில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் அருகில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் 700/- பணம் கைப்பற்றி வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.