பெரம்பலூர்: பெரம்பலூர், துறையூர், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் அரசு டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக சந்துக்கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் சென்றது,
புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், இதனிடையே தனிப்படை போலீசார் காட்டுக்கோட்டை மற்றும் அம்மம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்துக்கடையில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த கொளஞ்சியப்பன் மற்றும் மணிவண்ணன் ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 100 குவாட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,