இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் சட்டவிரோதமாக மதுபானம் விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 47 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 459 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.