இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை பதுக்குவோர் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து 15.01.2022-ம் தேதி தீவிர சோதனையில் ஈடுபட்ட இராமநாதபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜா அவர்கள் தலைமையிலான குற்றத் தடுப்பு பிரிவினர் தேவிபட்டிணம் அருகேயுள்ள சம்பை பகுதியில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனையில் ஈடுபட்ட நபரை TNP Act-ன் கீழ் கைது செய்து, அவரிடமிருந்து 1172 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.