திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து 13.09.2021-ம் தேதி முதல் 18.09.2021 தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 9 நபர்களை TNP Act -ன் கீழ் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 32 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.