கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது குட்டப்பட்டி கிராமத்தில் செல்லியம்மன் கோயில் அருகே உள்ள தேவன் மாந்தோப்பில் அரசால் தடை செய்யப்பட்ட பனங்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்து பனங்கள் வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 5 லிட்டர் பனங்கள் கைப்பற்றி சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.