சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்தினை வியாபார நோக்கத்திற்காகவும், மற்ற ஆதாயத்திற்காகவும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக, குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் மற்றும் V1 வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 24.05.2021 அன்று வில்லிவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவர் மருந்தை சட்டவிரோதமாக பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற செங்குட்டவன், வ/34, வில்லிவாக்கம், என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 30 ரெம்டெசிவர் மருந்து குப்பிகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்தினை வியாபார நோக்கத்திற்காகவும், மற்ற ஆதாயத்திற்காகவும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக, குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் மற்றும் V1 வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 24.05.2021 அன்று வில்லிவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவர் மருந்தை சட்டவிரோதமாக பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற செங்குட்டவன், வ/34, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 30 ரெம்டெசிவர் மருந்து குப்பிகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.