திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தலவாடம்பட்டியில் காத்தசாமி 63. என்பவரது தோட்டத்தில் உள்ள மோட்டார் ரூமில் சோதனை செய்தபோது அங்கு நாட்டுத்துப்பாக்கி-1, மருந்து தோட்டாக்கள்-6, காலி தோட்டாக்கள்-43, கருமருந்து -315 கிராம், பால்ரஸ் ஈயக்குண்டுகள்– 715 கிராம் மற்றும் நாட்டுத்துப்பாக்கி சரிசெய்ய பயன்படும் சில உபகரணங்களையும் கண்டுபிடித்தனர். மேலும் இவற்றை பறிமுதல் செய்து காத்தசாமி என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் சிறப்பாக பணிபுரிந்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா