இராமநாதபுரம் : 28.03.2022-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டாச்சியர் திரு.ஜஸ்டின் பெர்னான்டோ அவர்கள் சோழியக்குடி பகுதியில் மணல் திருட்டை தடுக்கும் விதமாக ரோந்து சென்றனர். சோழியக்குடி டாஸ்மாக் பின்புறம் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் வட்டாச்சியரைக் கண்டதும் தப்பி ஓடினர்.
அவர்களில் பழனிவேல் என்பவரை மட்டும் பிடித்து தொண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொண்டி காவல் ஆய்வாளர் திரு.சீனிவாசன் அவர்கள், சாந்தன், பழனிவேல், முரளி மற்றும் அஜித் ஆகிய நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்து பழனிவேல் என்பவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.