கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவகொண்டபள்ளி ஏரியில் சட்டவிரோதமாக சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார், சூதாடி கொண்டிருந்த ஏழு நபர்களை சுற்றிவளைத்து கைது செய்து அவர்களிடமிருந்து ரூ 3800/- பணம், சீட்டுக் கட்டுகள் மற்றும் 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிந்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.