கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் TO பாகலூர் ரோட்டில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது இந்திரா நகர் வழி பல்லவி சூப்பர் மார்க்கெட் அருகே உள்ள கடையில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹67,744/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.