கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் சூலூா் அடுத்த காடாம்பாடி பகுதியில் உதவி ஆய்வாளா் சுல்தான் இப்ராஹிம் தலைமையில் போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தபோது, சட்டவிரோதமாக பாட்டிலில்கள் அடைத்து விற்பனை செய்ய அங்கு நின்று கொண்டிருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அதே பகுதியை சோ்ந்த பழனிசாமி என்பவரது மனைவி கண்ணம்மாள் (65) என தெரியவந்தது. உடனே போலீஸார் அவரை கைது செய்தனா். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த சூலூா் போலீஸார் விற்பனை செய்வதற்காக கண்ணம்மாள் வைத்திருந்த சுமாா் 4 லிட்டா் கள் பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்