கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் ஓசூர் பேரண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் போலீசார் வாகன சோதனை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த இரண்டு நபர்களை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 150 கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சாவை வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து கஞ்சா பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.