சென்னை: சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, M-1 மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின்பேரில் காவல் குழுவினர் 19.09.2021 அன்று காலை, மாதவரம், முத்து மாரியம்மன் கோயில் தெரு அருகே கண்காணிப்பு பணியிலிருந்தபோது,
அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 நபர்களிடம் விசாரணை செய்து அவர்களை சோதனை செய்து, பையில் சட்டவிரோதமாக கஞ்சா மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக 1) சுரேந்தர் 23, மாதவரம், மற்றும் 2) சரண் 27, கொடுங்கையூர் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.