சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் T. பழையூர் மற்றும் தேரடி வீதி பகுதியில் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் மற்றும் திரு. சத்தியமூர்த்தி அவர்கள் ரோந்து சென்ற போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த செல்லப்பாண்டி, அபினேஷ், பன்னீர்செல்வம், அருண், கொம்பையன் மற்றும் வல்லரசு ஆகிய ஆறு நபர்கள் மீது u/s. 8(c) r/w. 20(b)(II)(A) NDPS Act -ன்படி வழக்கு பதிவு செய்து கைது சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 950 கிராம் கஞ்சா மற்றும் ரூ.5406 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி