தென்காசி : தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் பேருந்து நிலையம் அருகில் கஞ்சா விற்பதாக உதவி ஆய்வாளர் திருமதி. செல்வி அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் அங்கு விரைந்த காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ்குமார் அவர்கள் தலைமையிலான காவலர்கள் சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வீராணம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மணிகண்டன் என்ற நபரை S.V.கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்