மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பா ஓலை மதுக்கடை அருகே உசிலம்பட்டி பசுக்காரன்பட்டி ரோடு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவலர்கள் சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த இருவரை செய்தனர்.
மேலும் இது சம்பந்தமாக உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரி கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து கஞ்சா 22.500 Kg பறிமுதல் செய்தனர்
மேலும் மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் எச்சரித்து உள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி