இராமநாதபுரம் : சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது.
27.02.2022-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள சாத்தக்கோன்வலசை பகுதியில் சட்டவிரோதமாக சுயலாபம் கருதி கஞ்சா விற்பனை செய்த மண்டபம், பிள்ளைமடம் பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவரை சார்பு ஆய்வாளர் திரு.நாகநாதன் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
மேலும், அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.