கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் வெப்பாலம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு கிருஷ்ணகிரி To போச்சம்பள்ளி சாலையில் வெப்பாலம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி போது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார் எனவும் நிறுத்திய வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 2 யூனிட் ஒடக்கல் இருந்தது, அனுமதியின்றி ஒடக்கல் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு வந்து வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.