இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகேயுள்ள முள்ளிக்குடி பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றில் மணல் திருடுவதாக R.S.மங்கலம் வட்டாச்சியர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி காவல் ஆய்வாளர் திரு.பாலசிங்கம் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினரை கண்டதும் சட்ட விரோதமாக மணல் அள்ளியவர்கள் தப்பியோடிய நிலையில் லாரி உரிமையாளர்களின் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூன்று லாரிகளை பறிமுதல் செய்தனர்.