இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றில் மணல் திருடுவதாக கிடைத்த தகவலின் பேரில் கமுதி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அசோக் சக்கரவர்த்தி அவர்கள் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது சுயலாபம் கருதி இருசக்கர வாகனத்தில் மணலுடன் வந்த பால்பாண்டி என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை