சென்னை : தமிழக டி.ஜி.பி திரு.சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் தலைமையகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், காவலர்கள் எவ்வளவு தொகையை லஞ்சமாக பெறுகிறார்கள் என்ற விவரம் உத்தேசமாக குறிப்பிடப்பட்டு போலீஸாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட லாட்டரிவிற்பனை மற்றும் சொத்து தொடர்பான விவகாரங்கள் போன்றவற்றுக்கு ஒரு லட்சம் ரூபாய்வரை லஞ்சம் பெறப்படுவதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட விரோத மதுவிற்பனைக்கு 60 ஆயிரம் ரூபாயும், மணல் கடத்தலுக்கு 30 ஆயிரம் ரூபாயும், சூதாட்டம், விபத்து தொடர்பான வழக்குகளில் 10 ஆயிரம் ரூபாய் வரையும் லஞ்சம் பெறப்படுகிறது.
காவல் நிலையங்களில் எழுத்தர் முதல் ஆய்வாளர் வரை, 100ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரைலஞ்சம் பெறுவது தெரியவந்துள்ளது.
எனவே, லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் போலீஸார் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைத்துமாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், அதிகாரிகள் அனைவருக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்பி உள்ளனர்.