தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் கோவில்பட்டி உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று 19.01.2023 ரோந்து பணியில் ஈடுபட்டபோது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கோவில்பட்டி இளையரசனேந்தல் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் மகேஷ்குமார் 32. நாலாட்டின்புதூர் வடக்கு முடுக்கு மீன்டான்பட்டி பகுதியைச் சேர்ந்த எர்னெஸ்ட் மகன் அருள்ராஜ் 26. மற்றும் கோவில்பட்டி சாலைபுதூரைச் சேர்ந்த வள்ளிநாயகம் மகன் செண்பகராஜ் 23. என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி தனிப்படை போலீசார் குற்றவாளிகளான மகேஷ்குமார், அருள்ராஜ் மற்றும் செண்பகராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சா, ரொக்க பணம் ரூபாய் 12,000/-, எடை இயந்திரம், கத்தி மற்றும் இருச்சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளி மகேஷ்குமார் மீது ஏற்கனவே கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 6 வழக்குகளும், கழுகுமலை காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் என 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.