சென்னை: சென்னையிலிருந்து 10.10.2021-ம் தேதி காலை சைக்கிள் பயிற்சியில் பயணத்தை மேற்கொண்ட தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர் திரு.C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் மாமல்லபுரம் காவல்நிலையம் மற்றும் மகளிர் காவல்நிலையத்தில் ஆய்வு நடத்தினார்.
அப்போது காவல்துறை அதிகாரிகளிடம் சட்டம் & ஒழங்கு பிரச்சனை குறித்து கேட்டறிந்தார், மேலும் மாமல்லபுரம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் விபத்தில் இறந்த சதுரங்கபட்டினம் காவல்நிலைய தலைமை காவலர் திரு.தணிகைவேலனின் மனைவி சந்திரலேகாவிற்கு ஆறுதல் கூறி¸ அரசு நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்