திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 15.02.2020 ம் தேதி காலை 11.00 மணிக்கு காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் அவர்களின் தலைமையில் சட்டபூர்வமாக குழந்தையை தத்தெடுக்கும் முறை பற்றி பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் திரு.மோகன் அவர்களும், திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் திருமதி கமலா மற்றும் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளை சட்டவிரோதமாக தத்தெடுக்கும் குற்றத்தை தடுப்பது பற்றியும் சட்டப்படி தத்தெடுக்கும் முறை பற்றியும் விளக்கி கூறினார்கள். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.அஜிம் அவர்கள் நன்றியுரையாற்றினர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி