கோவை: கோவை மாவட்டம் அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக வெட்டாட்டம் என்னும் சூதாட்டம்  விளையாடிய 15 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.15,790/- மற்றும் சேவல் -2 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்
 
                                











 
			 
		    

