சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் திருமாஞ்சோலையில் SM Clinic வைத்து அப்பகுதி மக்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக போலிமருத்துவம் செய்து வந்துள்ளார்.
இத்தகவலை அறிந்த சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் திரு. இளங்கோமகேஸ்வரன் என்பவர் பூவந்தி காவல் நிலையத்தில் 03.09.2020 அன்று அளித்த புகாரின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்த காவல்துறையினர் போலியாக மருத்துவம் செய்த மேற்படி நபர் மீது u/s.417,420 IPC & 15 Indian medical council act 1956-ன் படி வழக்கு பதிந்து, கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை