வேலூர் : வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.முத்துசாமி இ.கா.ப மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் இ.கா.ப அவர்களின் உத்தரவு மற்றும் அறிவுறுத்தலின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.மனோகரன் அவர்கள் ( CWC) தலைமையில் நடைபெற்றது.உடன் Inspector Tmt.பேபி, Inspector Tmt. லட்சுமி, மற்றும் காட்பாடி AWPS WSSI Tmt.சுமதி இருந்தனர். விழிப்புணர்வு கூட்டத்தில் சட்டக் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இவ் விழிப்புணர்வு கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக எவ்வாறு குற்றங்கள் உருவாகிறது, அவ்வாறு குற்றங்கள் உருவானால் எந்த வகையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் மாணவ, மாணவியர்கள் இன்றைய இளைய தலைமுறையினர் வலைதளங்களின் மூலம் வரக்கூடிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு அவற்றை தடுக்கலாம் என்று குற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மாணவ, மாணவியர்களுக்கு நல்ல முறையில் படிக்கச் சொல்லி துணைக் காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்