சென்னை: பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி, பெ/வ 36, என்பவர் கடந்த 03.5.2021 அன்று மதியம், கைக்குழந்தையுடன் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் காயத்ரியின்
கழுத்திலிருந்த 4 ½ சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்து காயத்ரி , S14 பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
S14 பீர்க்கன்கரணை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட பாலாஜி, வ/36 திருவேற்காடு
என்பவரை 26.5.2021 அன்று கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் 4 ½ சவரன் தங்கச்சங்கிலி உட்பட 20 சவரன் தங்க நகைகள் , ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு, அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது