சென்னை: வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த அனுசுயா (பெ/30) என்பவர் கடந்த 18.08.2021 அன்று மாலை, வீட்டின் அருகே கிழக்கு மாட வீதியில் பாரத ஸ்டேட் வங்கி எதிரே நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் அனுசுயாவின் கழுத்திலிருந்த 1 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் செ
ன்றார். மேற்படி சம்பவம் குறித்து அனுசுயா, V-1 வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
V-1 வில்லிவாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, சம்பவ இடத்தின் அருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மேற்படி சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளி அரவிந்த்குமார் 24, பெரம்பூர் என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் அரவிந்த்குமார் 18.08.2021 அன்று கொளத்தூர் பகுதியிலும் ஒரு பெண்ணின் கழுத்திலிருந்த 1 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றது தொடர்பாக V-6 கொளத்தூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது தெரியவந்தது.
அதன்பேரில், குற்ற குற்றவாளியிடமிருந்து 2 சவரன் எடை கொண்ட 2 தங்கச்சங்கிலிகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.