தருமபுரி : இன்று(28.02.2022) தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தி முன்னிலையில்2011_பேடச்_காவலர்கள்_ஒன்றினைந்து_இறந்த_காவலரின்_குடும்பத்திற்கு_ரூபாய் 24,55102-/- லட்சம் நிதியுதவி வழங்கினர்.
கடந்த 30.09.2021-ம் ஆண்டு மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த திரு.ராஜ்குமார் என்ற காவலர் சாலை விபத்தில் சிக்கி மருத்துவ பலனின்றி மரணம் அடைந்தார்.
இதையடுத்து அவருடன் பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதும் உள்ள 2011பேட்ச் சக காவலர்கள் ஒன்றிணைந்து திரு.ராஜ்குமார் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய்.24,55102-/- லட்சத்திற்கான காசோலையை அவருடைய மனைவி திருமதி.தமிழ்ச்செல்வி அவர்களிடம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.கலைச்செல்வன்.இ.கா.ப., அவர்கள் வழங்கினார்.
உடன் 2011-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் உடனிருந்தனர்.
மேலும் தனக்கு கிடைத்த நிதியில் இருந்து ரூபாய் ஒரு இலட்சத்தை
பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் திரு.தேவேந்திரன் மகன் கிஷோர் (10) சிறுநீராக மாற்று அறுவை சிகிச்சைக்காக மறைந்த தெய்வத்திரு.ராஜ்குமார் அவர்களின் மனைவி திருமதி.தமிழ்ச்செல்வி உதவித்தொகையாக வழங்கி நெகிழவைத்தார்.