விருதுநகர் : சிவகாசியில் விபத்தில் மரணமடைந்த பெண் காவலர் முத்து முனீஸ்வரி குடும்பத்திற்கு ரூபாய் 26,42,000/- நிதியை சக காவலர்கள் வழங்கினர்.
2009 ஆம் ஆண்டு, காவல்துறையில்,பணியில் சேர்ந்த P.முத்து முனீஸ்வரி என்பவர் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த (10/08/2021) ஆம் தேதி சிவகாசி, ஜக்கம்மாள் கோவில் அருகில்,எதிரே வந்த லாரியில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அகால மரணம் அடைந்து விட்டார்.
அவருக்கு கணவர் பார்த்தசாரதி (கூலிவேலை) இரு மகன்கள் சக்திவேல் பாண்டியன் (வயது 07), சிவசக்தி பாண்டியன் (வயது 05) உள்ளனர்.
பெண் காவலர் முத்து முனீஸ்வரி மறைவிற்குப் பிறகு அவர் குடும்ப நலனுக்காக அவருடன் பணியில் சேர்ந்த 2009 – ஆவது பேட்ஜ் காவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரூபாய் 26,42,000/- (இருபத்தாறு லட்சத்து நாற்பத்தி இரண்டு ஆயிரம்) சேர்த்து, அவர்களது இரு மகன்களுக்கும் முறையே,
01) எல்ஐசியில் ரூபாய் 10,00,000/- (பத்து லட்சமும்),
02) போஸ்ட் ஆபீஸில் கிசான் விகாஸ் பத்திரம் மூலம் ரூபாய் 3,00,000/-(மூன்று லட்சமும்),
மொத்தம் 26,00,000/- (இருபத்தி ஆறு லட்சம்) முதலீடு செய்து, பாண்டு பத்திரமாக தயார் செய்து,
03) மீதமுள்ள தொகையான ரூபாய் 42,000/- (நாற்பத்தி இரண்டுஆயிரம்) அவர்களது கைச் செலவுக்காகவும், முத்து முனீஸ்வரி குடும்பத்தின் நலனுக்காகவும் சக காவலர்களால் வழங்கப்பட்டது.
சக காவலர்களின் ஒற்றுமையையும், பெருந்தன்மையையும், சேவையையும் பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.