திருநெல்வேலி: கொரானா தொற்று காலங்களில் பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினரின் உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தியும் காவலர்களின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் கொரோனா நோய் தொற்றை எதிர்த்து
போராடும் வகையில் காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் பொட்டலங்கள், முகக் கவசங்கள் மற்றும் முக்கிய ஆலோசனைகளையும் வழங்கி வரும் திருநெல்வேலி சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவ பேராசிரியர் திரு. மானக்சா, அவர்களின் சேவையை பாராட்டி, அவர்களை கௌரவிக்கும் வகையில்
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்,IPS., அவர்கள் மருத்துவரை நேரில் அழைத்து சேவையை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்