கரூர்: கோம்பைத்தொழுவை சேர்ந்தவர் ரவி (வயது 42). கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவிக்கும் இதே கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (42) என்பவருக்கும் இடையே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக முன்பகை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று ரவி ஞானசேகரன் சந்தித்து சமாதானமாக சென்று விடலாம் என கூறியுள்ளார்.
மேலும் சமாதானம் பேசுவதற்காக ஞானசேகரனை அதே கிராமத்தில் உள்ள ரவியின் உறவினரான கார்த்திக் என்பவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வீட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ரவியின் உறவினர்களான ரவி ஜெயப் பிரபு ரியாஸ் முகமது, ராஜேஷ், தாமரைச்செல்வன், முருகன், கார்த்திக் ஆகியோர்களிடம் ஞானசேகரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது ரவி மற்றும் அவரது உறவினர்கள் ஞானசேகரன் தாக்க தொடங்கினர். இதனையறிந்த ஞானசேகரனின் உறவினர்களான சின்னசாமி, இதயராஜ், பிரேம்குமார், கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ரவி மற்றும் அவரது உறவினர்களை தாக்கத் தொடங்கினர்.
தகராறின் போது திடீரென ஒருவருக்கொருவர் மறைத்து வைத்திருந்த கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கத் தொடங்கினர், மேலும் கத்தியால் தாக்கியதில் ஒரு தரப்பை சேர்ந்த ரவி, ராஜேஷ், ரியாஸ்முகமது ஆகியோர் காயமடைந்தனர். இதேபோல மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஞானசேகரன் காயமடைந்தார்.
தகவலறிந்த போலீசார் கோம்பைத்தொழு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கோஷ்டி மோதல் தொடர்பாக இரண்டு தரப்பையும் சேர்ந்த அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக கூறி கடமலைக்குண்டு போலீசார் ஜெயபிரபுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.