திருவள்ளூர் : திருவள்ளூர் பொன்னேரி அடுத்த பெரும்பேடு குப்பத்தில் கடந்த மே 1ஆம் தேதி மே தினத்தை முன்னிட்டு வாலிபால் போட்டி நடைபெற்றது. அப்போதுபொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் லட்சுமிபுரத்தை சேர்ந்த வாலிபர்கள் விளையாட்டுப் போட்டியில் தகராறு ஏற்பட்டது. பெரும்பேடு குப்பத்தை சேர்ந்த மோனிகா (25) வீட்டுக்கு உறவினர்கள் மீஞ்சூர் அடுத்த நாலூரை சேர்ந்த காமேஷ் (25), தீபக் (24), ஆகியோர் வந்திருந்தனர். அப்போது லட்சுமி புரத்தைச் சேர்ந்த அஜித், சூர்யா, ரஞ்சித், விஜய் ஆகிய தரப்பினருக்கும் காமேஷ் தரப்பினருக்கும் கோஷ்டி மோதல் ஏற்பட்டு காமேஷ் தீபக் ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயம் அடைந்த இருவரையும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பேடுகுப்பம் மோனிகா பொன்னேரி போலீசில் புகார் செய்தார் .பொன்னேரி போலீஸ் எஸ்.ஐ வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து லட்சுமிபுரம் பகுதி சேர்ந்த வாலிபர்கள் அஜித் (20), சூர்யா (22) ரஞ்சித் (20) விஜய் (28) ஆகிய நான்கு பேரும் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நேற்று மாலை பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர் .மேலும் சிலரை பொன்னேரி போலீசார் தேடி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்