கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ 6 லட்சம் மோசடி 3 பேருக்கு வலை
கோவை பக்கம் உள்ள வெள்ளலூர் சித்தண்ணபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன் இவர் அதே பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தார் இவரிடம் போத்தனூர் காந்திஜி ரோடு சேர்ந்த ரவி என்ற சிடிசி ஸ்ரீரங்க பெருமாள் உட்பட 10 பேர் சீட்டு போட்டு இருந்தனர் சீட்டு முடிவடைந்ததும் கொடுக்க வேண்டிய ரூ 10 லட்சத்தை ரவி திருப்பி கேட்டார் மகேந்திரன் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை இதுகுறித்து ரவி போத்தனூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் போலீசார் மகேந்திரன் கோமதி பத்மநாபன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.கோவையில் பெண் தொழில் அதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை
கோவை பீளமேடு ஜிஆர் ஜி நகரில் வசித்து வருபவர் கோகிலா (வயது 46 ) என்ஜினியரிங் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார் . இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு ஊட்டியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டார். இன்று காலையில் வீடு திரும்பினார் அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் 150 பவுன் தங்க நகைகள் காணவில்லை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர் .இதுகுறித்து கோவை பீளமேடு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள் பெண் தொழில் அதிபர் வீட்டில் 150 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்