கோவை: பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் திருமதி. பர்வீன்பானு அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டத்திற்கு விரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த குப்புராஜ் மகன் குமரகுருபரன் 46. அவரை கைது செய்து அவரிடமிருந்து 74.26 கிலோகிராம் புகையிலை பொருட்கள் மற்றும் 137 மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும், மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் திரு. அனந்தநாயகி அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. முரளி ஆகியோர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது.
சட்டத்திற்கு விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் ராஜன் 65. மற்றும் தண்டபாணி மகன் மணிகண்டன் 45. ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 390 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தும் மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்