கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் பொதுமக்களுக்கு தெரிவிப்பது, கோவை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்டு அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்ட 5 ஆறு சக்கர வாகனங்கள், 17 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 133 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 157 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 08.12.2021 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு கோவை அவினாசி சாலையிலுள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
ஏலத்தில் விடப்படும் வாகனங்கள் பொள்ளாச்சி வெங்கடேசா காலணியில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், கோவில்பாளையம் தேவம்பாளையம் பாலாஜி நகரிலுள்ள மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், சூலூர், மதுக்கரை,க.க.சாவடி, செட்டிபாளையம், தொண்டாமுத்தூர், அன்னூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி தாலுக்கா, கோமங்கலம், நெகமம் மற்றும் வால்பாறை காவல் நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏலம் எடுக்க விரும்புவோர் 07.12.2021 ஆம் தேதி மாலை 05.00 மணி வரை அந்தந்த மதுவிலக்கு அமல்பிரிவுகள் மற்றும் காவல் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். வாகனங்கள் ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (GST) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/gokul.png)
A. கோகுல்