கோவை: கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக பணிபுரிந்தவர் ராஜாமணி இவர் இன்று தேர்தல் ஆணையத்தால் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக கோவை மாவட்ட புதிய கலெக்டராக எஸ் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணிபுரிந்தவர் சுமித் சரண் இவரும் மாற்றம் செய்யப்பட்டார் கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் சென்னையில் டெக்னிக்கல் சர்வீஸ் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வந்தார். போலீஸ் கமிஷனர் பதவி இதுவரை ஐஜி அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது முதன் முதலாக கூடுதல் டிஜிபியாக உள்ளவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடம் மாறுதல் உத்தரவு உடனடியாக அமுலுக்கு வந்தது. புதிய போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று காலை 11 மணிக்கு பதவியேற்கிறார்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்